தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களில் கொரோனோ பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறத்உ. அதனால் இந்தபகுதிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு உடன் வருபவர்களுக்கும் கொரொனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருவதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு அதிகரிப்பது மற்றும் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளை மீண்டும் கொண்டு வருவது போன்றவை குறித்து முதல்வர் இன்று ஆலோசிக்க இருக்கிறார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் லாக்டவுன் போடப்படுமா என்பது உறுதியாகவில்லை.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

இதையடுத்து சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:

புத்தாண்டு தினத்தையொட்டி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறை ஆகியோர் இணைந்து கூட்டம் கூடுவதை தவிர்க்க கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை கல்லூரி வளாகங்களில் தொற்று பரவலை தடுக்க மாணவர்கள் கூட்டமாக ஒன்றுசேர்வதைத் தவிர்க்க கல்லூரி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com