தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்: எலான் மஸ்கிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்: எலான் மஸ்கிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு!

இந்தியா மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரான தமிழகத்திற்கு முதலீடு செய்ய வாருங்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உலகளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வருகிறது, எலன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம். ஆனால் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள்  உற்பத்திக்கு காலதாமதம் ஆகிறது. இந்திய அரசிடம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதால்தான் இந்த காலதாமதம் ஏற்படுவதாக டெஸ்லா நிறுவனத்தின் சிஈஓ-வான எலான் மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட  அரசுகள் தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்ய வருமாறு எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் முதலீடு செய்ய வருமாறு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்ததாவது;

இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 34% ஆக இருக்கிறது. எனவே இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரமாக விளங்கும் தமிழகத்திற்கு முதலீடு செய்ய உங்கள் வரவேற்கிறோம். மேலும் உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் 9-வது இடத்தில் இருக்கிறது.

-இவ்வாறு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com