தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு: பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு: பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரி ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பிய மசோதா இன்னும் பரிசீலனையில்தான் இருக்கிறது என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் தந்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்துக்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. மேலும் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய தமிழக அரசு நீதிபதி .கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கடந்த செப்டம்பரில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில், தமிழகத்துக்கு நீட் விலக்கு கோரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்கள் ஆகியும் இதுவரை இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இந்த மசோதா இன்னும் ஆளுநரின் பரீசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக எம்.பிக்கள் குழு, டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com