தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று சமூகப் பரவலாக மாறி வருகிறது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று சமூகப் பரவலாக மாறி வருகிறது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் இருந்த நிலை மாறி, சமூகத் தொற்றாக மாறி வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒமிக்ரான பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய மருத்துவ குழுவினர் நேற்று முந்தினம் (டிசம்பர் 26) சென்னை வந்தனர். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோருடன் மத்திய குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம், சென்னை விமான நிலையம் சென்று ஆய்வு நடத்தினர். சென்னை அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இன்று ஆய்வு நடத்த உள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடக்கிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 18 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துவிட்டனர். 16 பேர் சிகிச்சையில் உள்ளனர். 97 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இவர்களது பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் மரபணு ஆய்வகம்அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒமைக்ரான் பரிசோதனை நடத்த மத்திய அரசு அனுமதித்தால் உடனுக்குடன் பாதிப்பை கண்டறியலாம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று இருந்த நிலை மாறி, தற்போது சமூக தொற்றாக மாறி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com