தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் இல்லை: சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் இல்லை: சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்!

மிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இல்லை என்றாலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இல்லை. ஆனால் அதற்காக பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. வெளிநாடுகளில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப்பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையம் வருபவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

தமிழகத்துக்கு தென் ஆப்பிரிக்கா, பிரேசில் , சீனா, நியூசிலாந்து , இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும், சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்தாலும், 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com