தமிழகத்தில் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு!

தமிழகத்தில் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு!
Updated on

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இனி வரும் வாரங்களில் வியாழக்கிழமைகளில் இற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். அதேசமயம் வழக்கமான சனிக்கிழமை சிறப்பு முகாம்களும் நடைபெறும்.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com