தயிர் சாதம்

தயிர் சாதம்

-பாமா பார்த்திபன்.
தேவை: பச்சரிசி -1 கப், பால் -2 கப், புளிக்காத தயிர் ½ கப், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சிபச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன், பெருங்காயம் – ½ டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி (பொடியாக அரிந்தது) – தலா 1 டேபிள்ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 2, முந்திரி – 10, திராட்சை – சிறிதளவு, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – சுவைக்கேற்ப, மாதுளை முத்துக்கள் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியுடன் 2 டம்ளர் தண்ணீர் 1 டம்ளர் பால் சேர்த்து குழைய வேகவிடவும். ஒரு பாத்திரத்தில் சூடான சாதத்தை போட்டு லேசாக மசித்து அத்துடன் வெண்ணெய், பெருங்காயம், உப்பு, கறீவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சிபச்சை மிளகாய் விழுது, தயிர் சேர்த்து கலக்கவும். மீதமுள்ள பலை சேர்க்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், முந்திரி, திராட்சை தாளித்து தயிர் சாதத்தில் போடவும். மேலே மாதுளை முத்துக்களால் அலங்கரிக்கவும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com