தீயாய் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ்: உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல்!

தீயாய் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ்: உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல்!

தென்ஆப்பிரிக்காவில் உருவான 'ஒமிக்ரான்' என்ற புதியவகை கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளீல் வேகமாகப் பரவி வருவதால், உலக நாடுகள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளன.

, 'ஒமிக்ரான்' வைரஸ் உலக அளவில் பரவுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

.

ஒமிக்ரான் வைரஸானது மிக வேகமாக பரவுவதுடன் உருமாறும் தன்மையும் கொண்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வைரஸுக்கு எதிராக நாம் பயன்படுத்தும் மருந்துகளைத் தாண்டி செயல்படும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாத தன்மை ஆகியவற்றை கொண்டுள்ளது கண்டறீயப் பட்டுள்ளது. இதனால் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மாதிரிகளை எடுத்து பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் ஓரளவுக்கு பாதுகாப்பானவை. அதனால் கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.

இவ்வாறு 'ஒமிக்ரான்' வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com