தேசிய விருதை இயக்குநர் கையால் போட வைத்த விஜய் சேதுபதி: வைரல் வீடியோ!

தேசிய விருதை இயக்குநர் கையால் போட வைத்த விஜய் சேதுபதி: வைரல் வீடியோ!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

நடிகர் விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கையாக நடித்து சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது பெற்றார். இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை சந்தித்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் விஜய் சேதுபதி.


விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2019-ல் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இதில் அவர் திருநங்கையாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆரண்ய காண்டம் படத்தை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருந்த தியாகராஜன் குமாரராஜா இந்தப் படத்தின்மூலம் மேலும் கவனம் பெற்றார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து விருதினைப் பெற்றுக் கொண்டார்.

மேலும் விருதை எதிர்பார்த்து இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும் சவாலான கதாபாத்திரம் என்பதால் ஏற்று நடித்ததாகவும் அது சிறப்பான பலன்களை கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் பெற்ற தேசிய விருதை சூப்பர் டீலக்ஸ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிடம் கொடுத்து, அவர் கையால் அதை தன் கழுத்தில் போடவைத்து மகிழ்ந்துள்ளார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர, அது வைரலாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com