0,00 INR

No products in the cart.

தினமும் இரவில் மனைவியிடம் மன்னிப்பு கேட்பேன்: அபிஷேக் பச்சன் ஆச்சரியம்!

பாலிவுட் திரையுலகில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடி மிகவும் பிரபலம்! இந்நிலையில் அபிஷேக் பச்சன் தினமும் இரவு தூங்குவதற்கு முன் மனைவி ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் ஜோடி ஒரு நேர்காணலில் கூறியதாவது:

மற்ற எல்லா சாதாரண தம்பதிகள் போல எங்களுக்கும் இடையே அடிக்கடி சிறு கருத்து வேறுபாடுகள் வரும். அபிஷேக் பச்சனுடன் அடிக்கடி வாதம் செய்வேன். ஆனால் பிரச்சினைகளை உடனுக்குடன் மனம் விட்டுப் பேசி தீர்த்து கொள்வோம். அதனால் இதுவரை பெரிய பிரச்னைகள் எதுவும் வரவில்லை என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

ஆனால், அபிஷேக் பச்சன் தினமும் இரவு தூங்கும் முன் ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்பாராம்! அவர் சொன்ன இந்த விஷயம் வைரலாகிறது.

எந்த விஷயமாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் ஏதேனும் இருந்தால், அத்துடன் தூங்கச் செல்ல மாட்டோம். அதைப் பற்றி விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வந்த பின்பே மனம் நிம்மதி அடையும். அதில் என் பக்கம் தவறு இருந்தால் தயங்காம்மல் மன்னிப்பு கேட்பேன். தினமுமே இரவில் தூங்குவதற்கு முன் மனைவியிடம் மன்னிப்பு கேட்பது என் வழக்கம். அன்றைய தினத்தில் என்னையறியாமல் ஏதாவது ஒரு விஷயத்தில் அவர் மனதைப் புண்படுத்தி இருக்கலாம் அல்லவா? அதனால்தான் இப்படியொரு பழக்கத்தைக் கடைபிடிக்கிறேன்.

இவ்வாறு அபிஷேக் பச்சன் சொன்ன விஷயம் வைரலாகியுள்ளது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

தமிழில் அனிமல் த்ரில்லர்: ‘கெஸ்ட் – சாப்டர் 2’

0
-லதானந்த் குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் D.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் – சாப்டர் 2’. ரங்கா புவனேஷ்வர் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான  ‘ஆறாவது வனம்’ என்கிற...

நடிகையின் கலெக்டர் ஆகும் கனவு!

0
-ராகவ் குமார்  நடிகைகளில் மனிஷா பிரியதர்ஷினி வித்தியாசமானவர். களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக சுட்டி பெண்ணாக அறிமுகம் ஆனவர் இப்போது சில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.     மனிஷாவின் தாய்க்கு தன் மகள்...

தாய்லாந்தில் ஹனிமூன்!

0
புதுமண ஜோடிகளான  நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்  இப்போது தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். இவர்களது ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது. நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த  7 ஆண்டுகளாக காதலித்து...

O2  படத்தின் ஒளிப்பதிவில் சாதனை!

0
-லதானந்த் சவாலான கதைக் களத்தை சாமர்த்தியமாகப் படமாக்கியிருக்கிறார்  ’O2’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்! வெங்கட் பிரபுவின் ’மன்மதலீலை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து, கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்,...

ஆஹா யோகா : காலட்சேபம் கேளுங்க!

0
- ஆர்.மீன லதா, மும்பை. ஐ.நா சபை அறிவிப்பின்படி, ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக 2015-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப் படுகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் பிரமாண்டமாக யோகா நிகழ்ச்சிகள்...