திருவண்ணாமலை தீபத் திருவிழா: கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!

திருவண்ணாமலை தீபத் திருவிழா: கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது கொரோனா தடுப்பை முன்னிட்டு நேற்று மதியம் 1 மணியிலிருந்து சனிக்கிழமை (நவம்பர் 20) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலையில் இன்றும் நாளையும் 20,000 பக்தர்களை கிரிவலம் செல்ல தமிழக அரசு அனுமதி தெரிவித்துள்லது.

திருவண்ணாமலை கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு அனைத்துபக்தர்களையும் அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில்தமிழக அரசு சார்பாக தெரிவித்ததாவது:

கொரோனா தடுப்பு வழிமுறைகளை முன்னிட்டு கார்த்திஅகை தீபத் திருவிழாவின்போது திருவண்ணாமலை கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கவாய்ப்பில்லை. ஆனால் இன்றும் நாளையும் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.

-இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை மாலை6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி உச்சிக்குசெல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டுஉள்ளது.

வழக்கமாக மகாதீபத்தன்றும், அந்தசமயத்தில் வரும்பவுர்ணமியன்றும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அந்த வகையில். கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று மதியம் 1.03 மணிக்கு தொடங்கி நாளை மதியம் 2.51 மணிக்கு நிறைவு பெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com