
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஒரு வாரமாக கடும் சரிவை சந்தித்து வருவதால், சென்செக்ஸ் 1,011 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
இதுகுறித்து மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் தெரிவித்ததாவது;
உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக ஏற்றம் காணத்தொடங்கி, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.
இந்தநிலையில் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி அதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் முதல் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகளாவியஅளவில் பங்குச் சந்தைகள் சரிந்ததால், இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடுமையாக சரிந்த்து வருகின்றன. ஆசிய பங்குச்சந்தைகளில் பங்குகள் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவை எதிர்கொண்டன. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான கணிப்பால் டாலர் மதிப்பு உயர்ந்தது. இதன் எதிரொலியால் உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிவடைந்தன.
இவ்வாறு மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் தெரிவித்துள்ளது