தொல்லியல்துறை அறிஞர் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!

தொல்லியல்துறை அறிஞர் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!
Published on

தமிழகத்தின் முதுபெரும் தொல்லியல் துறை அறிஞர் நாகசாமி மறைவு தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனரும் முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். தஅவரது மறைவுக்கு பிரதமர் மோடி தன் டிவிட்டர் பக்கத்தில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் தெரிவித்ததாவது:

தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் ஆர். நாகசுவாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள்.வரலாறு மற்றும் தொல்லியல் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது.அவரது மறைவால் வேதனை அடைகிறேன்.அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள்.ஓம் சாந்தி.

இவ்வாறு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் அறிஞர் நாகசாமி கடந்த 1959-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராகவும், பின்னர்,1963-ஆம் ஆண்டு முதல் 1965-ஆம் ஆண்டு வரை தமிழக அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும்,மேலும்,1966-ஆம் ஆண்டு முதல் 1988-ஆம் ஆண்டு வரை தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராகவும் பணியாற்றியவர். கல்வெட்டு,கலை,இசை, நாட்டியம், தமிழ் வரலாறு உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம்,சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பல நூல்களையும் எழுதியவர். நாகசாமியின் பணிகளை பாராட்டி,மத்திய அரசு, அவருக்கு 2018-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com