திருப்பதிக்கு பாதயாத்திரை: 300-க்கும் அதிக தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் தர்ணா!

திருப்பதிக்கு பாதயாத்திரை: 300-க்கும் அதிக தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் தர்ணா!

திருமலை திருப்பதி கோவிலுக்கு வேலூரிலிருந்து பாதயாத்திரையாக சென்ற சுமார் 300-க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அனுமதி மறுத்ததால், மலையடிவாரத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பக்தர்கள் சுமார் 500 பேர் ஒரு குழுவாக இணைந்து கடந்த 25 ஆண்டுகளாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக வந்து ஏழுமலையானை வழிபட்டு செல்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலம் தேவஸ்தானத்தால் வழங்கப்படும் நிலையில், இக்குழுவினரில் சுமார் 150 பேருக்கு மட்டுமே இலவச தரிசன டிக்கெட்டுகள் கிடைத்ததாகவும், மற்றவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இக்குழுவின் 500 பேரும் இன்று குடியாத்தத்திலிருந்து பாதயாத்திரையாக திருப்பதி மலையடிவாரம் வந்து சேர்ந்தனர். ஆனால், தரிசன டிக்கெட்டுகளை வைத்திருந்த பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதி ஆலயத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு, மீதி 350 பக்தர்களை ஆலய ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அனுமதி மறுக்கப்பட்ட பக்தர்கள் மலையடிவாரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் ஒரு மாதமாக மாலை போட்டு விரதம் இருந்து பாதயாத்திரை வந்திருப்பதால், தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைததனர்.

இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com