0,00 INR

No products in the cart.

5 குழந்தைகளின் கல்விக்கு நடிகர் விஷால் உதவி!

-ராகவ் குமார்.

டிகர் விஷால் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் லத்தி சார்ஜ் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், விஷால் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதாவது கணிசமான ஒரு தொகையை 5 பெண் குழந்தைகளின் கல்விக்காக தருவதாக அறிவித்தார்.அதையடுத்து தங்களின் பள்ளிச் சீருடையுடன் மேடைக்கு  வந்த அந்த 5 குழந்தைகளும் விஷாலிடமிருந்து காசோலையை பெற்று சென்றனர்.

நீங்கள் தரும் பொக்கே, மாலை பொன்னாடை போன்றவை சற்று நேரத்தில் எங்கோ  குப்பைக்கு சென்று விடும். ஆனால் இந்த கல்விக்கு செய்யும் உதவி, காலம் முழுவதும் அந்த குழந்தைகளுக்கு மாற்றம் ஏற்படுத்தும், நான் இதை மேடையில் தருவதற்கு காரணம், இதனால் உந்தப்பட்டு இது போன்ற உதவிகளை பிறரும் செய்ய வேண்டும் என்பதால்தான். “என்றார் விஷால்தனது அம்மாவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் இந்த உதவிகளை செய்து வருகிறார் விஷால்

சரி.. லத்தி சார்ஜ் படம் எப்படி? இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார் விஷால். மேலும் வினோத் குமார் இயக்கியுள்ள இந்த லத்தி சார்ஜ் படத்தில் ஆக்ஷனுடன் சேர்த்து சினிமாவில் அதிகம் சொல்லாத போலீஸ் கான்ஸ்டபிள்களின் வாழ்க்கையும் சொல்ல பட்டுள்ளது.

படத்தின் இசை வெளியிட்டு விழாவில் போலீஸ் சீருடையுடன் விஷால் கலந்து கொண்டார். சில ஆண்டு இடைவெளிக்கு பின் சுனைனா லத்தி சார்ஜில் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

  1. நடிகர்கள் செய்வது வரவேற்க வேண்டிய விஷயம். இதை நடிகரின் பப்ளிசிட்டியாக பார்க்காமலே அவரொபாராட்டி மகிழ்கிறேன்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

0
லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும்  இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக  காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.   சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...

தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைப்பில் ‘ஹர் கர் திரங்கா’ ! 

0
-லதானந்த்.  'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்திப் பாடல், வெளியிடப்பட்ட  சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.   தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும்...

வேட்டி கட்டி அசத்திய வெளிநாட்டு செஸ் வீரர்! 

0
-காயத்ரி.  மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், அவர்களின் நாட்டு கலாச்சாரத்தை பிரபலிக்கும் வகையில் வண்ண...

நான்கு கதை, நான்கு திசை, நான்கு பார்வை! 

0
-ராகவ் குமார்.   சோனி லைவ் தளத்தில் வெளியான ‘விக்டிம்’  திரைப்படம் ரொம்பவே வித்தியாசமானது. இந்த ஒரே திரைப்படத்தில் 4 வெவ்வேறு கதைகளை 4 பெரிய இயக்குனர்களான பா. ரஞ்சித், எம் . ராஜேஷ்,  சிம்பு...

போர் ஊற்றி எழுதிய காதல் காவியம் ‘சீதா ராமம்’! 

0
-லதானந்த்  நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம், ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ்,...