ஆரம்பத்தில் பரபரப்பு.. விக்ரந்த் ரோனா!   

ஆரம்பத்தில் பரபரப்பு.. விக்ரந்த் ரோனா!   

-ராகவ் குமார்.

தொழில் நுட்பம் மட்டும் ஒரு படத்தை தூக்கி நிறுத்துமா என்றால், இல்லைகதையும் திரைக்கதையும் முக்கியம் என்று மீண்டும் நிரூபித்து உள்ளது விக்ரந்த் ரோனா திரைப்படம்.     

வனங்கள் அதிகம் சூழ்ந்த கிராமத்தில் சிறு குழந்தைகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தூங்க விட படுகிறார்கள். இந்த கொலையை விசாரணை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் பிணம் தலை வேறு உடல் வேறு கண்டு எடுக்கப்படுகிறது.   

இந்த சூழ்நிலையில் புது இன்ஸ்பெக்டராக விக்ரந்த் ரோனா அந்த மர்மமான கிராமத்திற்கு வருகிறார்.கொலைக்கான காரணங்களை கண்டறிய முயல்கிறார். ஒரு கட்டத்தில் சில துப்புகளை வைத்து கொலையாளியை நெருங்குகிறார்ஆரம்பத்தில் பரபரப்பாக நகரும் காட்சிகள் பின்பு வேகம் குறைந்து பரபரப்பை குறைத்து கொள்கிறது

சுதீப்பின் மாஸ் என்ட்ரி நன்றாக இருந்தாலும் கொலையாளியை  கண்டு பிடிக்கும் திரைக்கதையில் சுவாரசியம் குறைவாக உள்ளது.ஸ்டைலும், மகளிடம்  அன்பு காட்டும் நடிப்பிலும் வேறு லெவலில் செய்து இருக்கிறார்.

கடுகடுப்பான ஊர் தலைவராக இருந்து கொண்டே உள்ளுக்குள் மகனின் அன்புக்கு ஏங்குகிறார் மதுசூதன ராவ்வில்லியம் டேவிட்டின் ஒளிப்பதிவும் சிவகுமாரின் ஆர்ட் டைரக்க்ஷனும் கதைக்கு பலம் சேர்க்கிறது

படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் இரவு இருட்டில் எடுக்கபட்டுள்ளது.. கதை எந்த கால கட்டத்தில் எடுக்க பட்டது. மின்சாரம் இல்லையா என்ற கேள்விகள் எழுக்கின்றன.

3D யும் இருட்டும் போதுமா? படத்தில் வலுவான திரைக்கதை வேண்டாமா என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைக்கிறார்கள்டான்ஸ் ஆடும் பூதம், பூதஸ்தலம் போன்ற விஷயங்கள் கொஞ்சம் பயமுறுத்துகின்றன.. 

விக்ரம் ரோனாதிரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கம்பீரமாக நின்று இருப்பான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com