முதல்வர் பாராட்டிய ‘இரவின் நிழல்’! 

முதல்வர் பாராட்டிய ‘இரவின் நிழல்’! 

லதானந்த் 

 மிழ்த் திரையுலக இயக்குனரும் நடிகருமான இரா.பார்த்திபனின் 'இரவின் நிழல்' படம் சர்வதேச அளவில் பாரட்டுகளைக் குவித்து வருகிறது 

சமீபத்தில் 'இரவின் நிழல்' திரைப்படத்தைக் கண்டு ரசித்த தமிழக முதல்வர் மு..ஸ்டாலின், இயக்குனர் பார்த்திபனின் அசாத்தியமான சாதனை  முயற்சியை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் 

"இரவின் நிழல் திரைப்படம்  பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில்  அற்புதம்!" என்று கூறிவிட்டு, பார்த்திபனையும் படக் குழுவினரையும் வாழ்த்தியிருக்கிறார். 

இயக்குனர் பார்த்திபன் சும்மா இருப்பாரா?! தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் 'நேற்றைய அரசியல் வரலாறு' என்னும் புத்தகத்தை முதல்வருக்குப் பரிசளிக்க, அவரும் புன்சிரிப்புடன் பெற்றுக் கொண்டிருக்கிறார். 

முதல்வரின் பாராட்டு, தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக பார்த்திபன் நன்றி தெரிவித்தார்! 

இதுவரை 'இரவின் நிழல்' திரைப்படம் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com