0,00 INR

No products in the cart.

ஐங்கரன்.. தேவை அங்கீகாரம்!

-ராகவ் குமார்.

நமது நாட்டின் இளைய தலைமுறையினர் அவர்களது  திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நெற்றி பொட்டில் அடித்தது போல சொல்கிற்து ‘ஐங்கரன்’ படம்! டைரக்டர் ரவி அரசுவின் இயக்கம் அசத்தல்.

தனது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அரசால் அங்கீகாரம் எதிர்பார்த்து கிடைக்காமல் போராடிகொண்டிருக்கிறார் ஜி. வி. பிரகாஷ் . நாமக்கல் பகுதியில் கோழிபண்ணை வைத்து நடத்தி கொண்டிருக்கும் முதலாளி ஒருவர், லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு தனது பண்ணை கோழிகளின் வளர்ச்சிக்காக அளவுக்கு அதிகமான மருந்துகளை செலுத்துவதைக் கன்டுபிடிக்கிறார் ஜி. வி. பிரகாஷ். அதை சமூக வலைத்தளங்களில் ஜி.வி வெளியிட, அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார் முதலாளி. இதன் நகைகடைகளில் கொள்ளை அடிக்கும் வடநாட்டு கொள்ளை கும்பல் ஒன்று ஒரு சில காரணங்களுக்காக இரு நூறு அடி பள்ளத்தில் ஒரு குழந்தையை தள்ளி விடுகிறது.இந்த குழந்தையை மீட்க – தான் கண்டு பிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலமாக முயற்சிக் கிறார், ஜி.வி.

ஜி.வி பிரகாஷ் அந்த குழந்தையை மீட்டாரா? கொள்ளை கும்பல் என்ன ஆனது? கோழிபண்னை முதலாளி என்ன செய்தார்? என்ற இந்த இருவெவ்வேறு கதைகளங்களை ஒரு புள்ளியில் சேர்த்து சுவாரசியமாகவும், நேர்த்தியாகவும், சமூக அக்கறையுடனும் சொல்லிஇருக்கிறார் டைரக்டர் ரவி அரசு.

குழந்தையை மீட்க மக்களும் ஜி. வி யும் காட்டும் அக்கறை, அதிகாரிகளுக்கு இல்லாமல் இருப்பது, அறிவுசார் காப்புரிமை மையத்தில் அதிகாரிகள் எந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கும் ஆதரவு அளிக்காமல் இருப்பது என பல கா ட்சிகளில் டைரக்டர் நம்மை ஈர்க்கிறார்.

ஜி. வி. பிரகாஷ் சமூக அக்கறை கொண்ட படத்தில் நடித்திருக்கிறார். சபாஷ் வாய்ப்புக்கும், அங்கீகாரதிற்கும் ஏங்கும் இளைஞனாக கட்சிதமாக பொருந்தி போகிறார். அதேபோல் நேர்மைக்கும், திறமைக்கும் மதிப்பில்லாத காவல் துறை பணியில் பொங்குகிறார் நரேன்..மற்றபடி  மஹிமா நம்பியார் வந்து போகிறார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் நாமே குழிக்குள் விழுந்தது போல உணர்வு வருகிறது. நேர்மையாக இருப்பதே ஒரு சாதனைதான் என்பது போன்ற ஆனந்த் குமரேஷ் வசனங்கள் கூடுதல் பலம்.

நமது நாட்டில் பல திறமையாளர்கள் இருக்கிறார்கள். நமது சிஸ்டத்தால் இவர்களது திறமை வெளிப்படுவது இல்லை என கொஞ்சம் அழுத்தமாகவேசொல்லிருக்கிறது ஐங்கரன்.

ஐங்கரன் -தேவை அங்கீகாரம்!

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

விக்ரம் 2-விலும் லோகேஷ்தான் இயக்குனர்: கமல்ஹாசன் அறிவிப்பு!

0
கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது அதில் கமல்ஹாசன் பேசியதாவது: கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி விக்ரம் படம் ரிலீஸாக...

அன்னை இல்லத்திலிருந்து அடுத்த நடிகர்!

0
-லதானந்த். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து மற்றொரு கலையுலக வாரிசு உருவாகியுள்ளார்.  நடிப்புப் பல்கலைக்கழகமான சிவாஜியின் அன்னை இல்லத்திலிருந்து அவரது மகன் பிரபு, பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் போன்றவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது...

நெஞ்சுக்கு நீதி; சமூக நீதிக்கான போராட்டம்!

0
-ராகவ் குமார். ‘ஆர்ட்டிகள் 15’ என்ற இந்தி படத்தின் மைய்ய கருவை எடுத்துகொண்டு தமிழ் சூழலுக்கு ஏற்றார்போல் ‘நெஞ்சுக்கு நீதி’யை இயக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.  இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ரோமியோ பிக்ச்சர்...

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 

0
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.அதையடுத்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ மற்றும் அண்மையில் வெளிவந்த ‘ராஜவம்சம்’...

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

0
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது; சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த...