0,00 INR

No products in the cart.

கமலை வென்றதில் மீண்டும் மகிழ்ச்சி:  வானதி ட்வீட்!

டிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி, வசூலில் வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பார்த்து பிஜேபி எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசன் தன் டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன், தன்  குடும்பத்தினருடன்விக்ரம்’ படத்தை பார்த்து ரசித்த புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது:

கம்லஹாசனின் ‘விக்ரம்’ படத்தை கண்டு ரசித்தேன். உங்கள் கலைப் பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன்.

-இவ்வாறு வானதி சீனிவாசன் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி சார்பாக கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை பிஜேபி-யின் வானதி சீனிவாசனிடம் பறி கொடுத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் விக்ரம் படம் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தனது  ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை தொடங்கிய பிறகு வெளியான இரண்டாவது திரைப்படம் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதி, மாநகரம், மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். விக்ரம் திரைப்படம் இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

திருச்சிற்றம்பலம்; சிறப்பற்ற கதை அம்பலம்! 

0
-  ராகவ் குமார்   போலீஸ் இன்ஸ்பெக்டர்(பிரகாஷ்ராஜ் ) மகனான திருச்சிற்றம்பலம் (தனுஷ் ) தனது அம்மா, தங்கை மரணங்களுக்கு அப்பா தான் காரணம் என்று எண்ணி அப்பாவிடம் பேசாமல் இருக்கிறார்.அதே வீட்டில் வசிக்கும் பால்ய கால...

விருமனின் படக் குழுவுக்கு வைரக் காப்பு! 

0
-லதானந்த்.  'விருமன்' படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பைப் பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.அத்துடன் 'விருமன்' படத்தை...

பிரதமருக்கு தானிய பெட்டகம் பரிசு!

0
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 17) டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அதற்கு முன்னதாக,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை...

பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்; இன்று துவக்கம்! 

0
தமிழக பள்ளி மாணவர்கள் புத்தகம் வாசிக்கும் பழகத்தை மேம்படுத்த தமிழக அரசு ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியது அந்த வகையில் இன்று திருச்சி, சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில்...

லைலாவைக் கொன்றது யார்?!

0
-ராகவ் குமார்   விஜய் ஆண்டனி தன் படத்திற்கு வித்தியாசமான டைட்டில் வைத்து ரசிகர்களை ஈர்ப்பவர். அந்த வகையில் பிச்சைக்காரன், சைத்தான் படங்களை தொடர்ந்து இப்போது கொலை என்ற பெயரை டைட்டிலாக வைத்துள்ளார்.       சஸ்பென்ஸ்...