0,00 INR

No products in the cart.

விருதுகள் குவிக்கும்  ‘இரவின் நிழல்’! 

-லதானந்த்

இயக்குனர் பார்த்திபன் தனது முதல் படமான ‘புதியபாதை’யில் ஆரம்பித்து, கடைசியாக வெளியான  ‘ஒத்த செருப்பு’  வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி, இயக்கித் தனக்கென தனிப் பாதையை உருவாக்கி அதில் வெற்றிகரமாகப் பயணித்துவருகிறார். 

ஒத்த செருப்பு 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது உட்படப்  பல உலக விருதுகளைப் பெற்றது. தனது முந்தைய படங்களில் உலக சினிமாவை நோக்கிச் சென்ற பார்த்திபன், தற்போது உலக சினிமாவைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

உலகின் முதல் NON – LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான ‘இரவின் நிழல்’ படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து, உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தார்.

அதில் மூன்று சர்வதேச விழாக்களில்  ‘இரவின் நிழல்’ வெற்றிபெற்றுள்ளது. ஒளிப்பதிவாளர் ஆர்தர் A .வில்சனுக்கு  இரண்டு விருதுகளும், இரவின் நிழல் படத்துக்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது. மேலும் இரண்டு சர்வ தேச விருதுகளில் Official Selection லிஸ்ட்டில் உள்ளது. 

சர்வதேச விருதுகள் கிடைத்ததில் பார்த்திபனுக்கு மகிழ்ச்சி என்றாலும், ஜூலை 15 வெளிவர இருக்கும் இரவின் நிழலுக்குத் திரையரங்கிற்கு  ரசிகர்கள் வந்து கைதட்டல்  மற்றும் விசிலுடன் தரப் போகும் பெரு வெற்றியே தனக்கான பெரிய விருது எனக் காத்திருக்கிறார்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

0
லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும்  இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக  காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.   சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...

தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைப்பில் ‘ஹர் கர் திரங்கா’ ! 

0
-லதானந்த்.  'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்திப் பாடல், வெளியிடப்பட்ட  சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.   தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும்...

வேட்டி கட்டி அசத்திய வெளிநாட்டு செஸ் வீரர்! 

0
-காயத்ரி.  மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், அவர்களின் நாட்டு கலாச்சாரத்தை பிரபலிக்கும் வகையில் வண்ண...

நான்கு கதை, நான்கு திசை, நான்கு பார்வை! 

0
-ராகவ் குமார்.   சோனி லைவ் தளத்தில் வெளியான ‘விக்டிம்’  திரைப்படம் ரொம்பவே வித்தியாசமானது. இந்த ஒரே திரைப்படத்தில் 4 வெவ்வேறு கதைகளை 4 பெரிய இயக்குனர்களான பா. ரஞ்சித், எம் . ராஜேஷ்,  சிம்பு...

போர் ஊற்றி எழுதிய காதல் காவியம் ‘சீதா ராமம்’! 

0
-லதானந்த்  நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம், ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ்,...