தேசிய மகளிர் யோகாசனப் போட்டி; தமிழகத்துக்கு 2 தங்கப் பதக்கங்கள்!

தேசிய மகளிர் யோகாசனப் போட்டி; தமிழகத்துக்கு 2 தங்கப் பதக்கங்கள்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சமீபத்தில் 3 நாட்கள் நடந்த தேசிய மகளிர் யோகாசன போட்டியில் தமிழக வீராங்கனைகள் இரண்டு தங்கப் பதக்கங்களையும் 5 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர். அந்த வகையில் அதிக பதக்கங்கள் வென்ற மாநிலங்கள் வரிசையில் தமிழகம் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்தது.

மகளிர்களுக்கான இந்த தேசிய யோகாசன போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த 169 வீராங்கனைகள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில். மகாராஷ்டிரா முதலிடமும் தமிழகம் 2-ம் இடமும் பிடித்தது. இதுவரை தேசிய அளவிலான இந்த யோகாசன போட்டி இரண்டு முறை நடைபெற்றிருக்கிறது இவை இரண்டிலும் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடம் வகித்து வருகிறது .போட்டியை முடித்துவிட்டு ரயில் பயணமாக சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தடைந்த வீராங்கனைகளுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் யோகா பயிற்சியாளர் எழிலரசி. அவர் கூறியதாவது;

சீனியர் மகளிருக்கான இந்த யோகாசன போட்டியில் தமிழகம் 2தங்கப் பதக்கமும் 5 வெள்ளிப் பதக்கங்களும் பெற்று சாதனை படைத்தது. தமிழகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டில் யோகாசனம் இடம்பெற்றுள்ளதால், யோகாசனத்தில் பதக்கம் பெற்ற வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் இதனால் அவர்கள் வாழ்வாதாரம் உயரும். இதற்கு தமிழக அரசு யோகாசனத்தை ஊக்குவிக்க வேண்டும்.

-இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும் அடுத்தமுறை இப்போட்டியை தமிழகத்தில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com