0,00 INR

No products in the cart.

கார்கியாக மலர் டீச்சர்!

-ராகவ் குமார் 

பிரேமம் படத்தில்  மலர் டீச்சராக நடித்த  சாய் பல்லவியை தமிழ் ரசிகர்கள் மறக்க முடியாது. தெலுங்கில் இப்போது பிஸியாக நடித்து கொண்டிருக்கும் சாய் பல்லவி தற்சமயம் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் வழங்கும் கார்கி படத்தில் நடிக்கிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை கெளதம் ராமசந்திரன் இயக்குகிறார். இந்த படத்தின் ட்ரைலர், போஸ்டர் பார்க்கும்போது இன்னொரு ஜெய்பீம் படமாக இருக்குமோ என்று நமக்கு கேள்வி வருகிறது. ஆனால் அப்படி இல்லை என்று பதில் தருகிறார் டைரக்டர்.

‘’நாம் செய்தித்தாள்களில் அன்றாடம் படிக்கும் நான்கு செய்திகளின் தொகுப்புகளை ஒரு கதையாக உருவாக்கி இருக்கிறேன்’’ என்கிறார்.

‘’சரி.. இந்த படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு எப்படி?’’

‘’ஒரு காட்சி எடுத்து முடித்ததும் நானே போதும் என்று நினைத்தால் கூட இன்னொரு டேக் பாக்கலாம் என்று சொல்லுவார் சாய் பல்லவி.  அந்த அளவுக்கு டெடிகேட்டாக வேலை செய்யும் நடிகை’’ என்று சொல்கிறார்  டைரக்டர்.

இப்படத்தில் சுதா  என்ற திருநங்கையும் முக்கிய காதபாத்திரத்தில் நடித்து வருகிறார். படம் வெளியான பின்பு சுதாவின்  கேரக்டர் பேசப்படும் என்கிறது சினிமா வட்டாரம்.  இது போன்ற படங்களும்  டைரக்டர்களும் தமிழில் மாற்று சினிமாவுக்கான நம்பிக்கையை தருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்; இன்று துவக்கம்! 

0
தமிழக பள்ளி மாணவர்கள் புத்தகம் வாசிக்கும் பழகத்தை மேம்படுத்த தமிழக அரசு ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியது அந்த வகையில் இன்று திருச்சி, சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில்...

லைலாவைக் கொன்றது யார்?!

0
-ராகவ் குமார்   விஜய் ஆண்டனி தன் படத்திற்கு வித்தியாசமான டைட்டில் வைத்து ரசிகர்களை ஈர்ப்பவர். அந்த வகையில் பிச்சைக்காரன், சைத்தான் படங்களை தொடர்ந்து இப்போது கொலை என்ற பெயரை டைட்டிலாக வைத்துள்ளார்.       சஸ்பென்ஸ்...

வைரமுத்து திறந்து வைத்த புத்தக வளாகம்! 

0
-லதானந்த்  சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர்.நல்லகண்ணு தலைமையில், கவிப்பேரரசு வைரமுத்து ஆகஸ்ட் 12-ம்...

விருமன் விறுவிறுப்பு கம்மி!   

0
-ராகவ் குமார் .    தமிழ் சினிமாவும் இந்திய சினிமாவும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்க, நமது முத்தையா மட்டும் குடி பெருமை,செண்டிமெண்ட், சொந்தத்திற்குள் திருமணம் என விருமனில் கதை விட்டு இருக்கிறார்.      தாசில்தாராக இருந்து...

நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

0
லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும்  இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக  காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.   சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...