0,00 INR

No products in the cart.

 கர்ப்பிணி கெட்டப்பில் நடிகை கஸ்தூரி: ரசிகர்களுக்கு அதிர்ச்சி போட்டோஸ்!

நடிகை கஸ்தூரி தான் கர்ப்பமாக இருப்பது போன்ற இரு புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அவை பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை, என எல்லா துறைகள் குறித்தும் தனது கருத்துக்களை பதிவு செய்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். மேலும் சினிமாக்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் ஐட்டம் டான்ஸ் ஆடுவது,  டிவி சீரியல்கள், வெப் சீரிஸ் என்று இப்போதும் பிஸியாக  இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கர்ப்பமாக இருக்கிற தோற்றத்துடன் ஒரு புகைப்படத்தை ’மீண்டும் கர்ப்பம்’ என்று தலைப்பில் வெளியிட்டார். ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இன்று அது குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

‘’நான் நிஜமாகவெல்லாம் கர்ப்பமாக இல்லை. இப்போது நான் தெலுங்கில் நடித்து வரும் ’மிஸ்டர். பிரக்னண்ட்” படத்தின் ஸ்டில் போட்டோக்கள்தான் அவை!’’ என்று விளக்கமளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று கஸ்தூரி வெளியிட்ட அந்த கர்ப்பத் தோற்றத்திலான புகைப்படத்துக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

0
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது; சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த...

புழு; திரைப்பட விமர்சனம்!

1
-தனுஜா ஜெயராமன்  கேரள மம்முட்டி நடிப்பில் புதுமுக பெண்இயக்குனர் ரதீனா இயக்கிய மாறுபட்ட மொழிமாற்ற (தமிழில்) திரைப்படம் புழு.  முதலில் இப்படியான நெகடிவ் கேரக்டரில் நடித்த மம்முட்டியின் துணிவு பாராட்டுக்குரியது. பல்வேறு முகபாவங்களில் பல்வேறு உணர்ச்சிகளை...

டான்; அறியும் தேடல்!

0
-ராகவ் குமார் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ள கல்லூரி கதை டான். சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார். ‘நமது பிள்ளைகளை விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க விடுங்கள்’ என...

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார். மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக...

தொண்டர் வீட்டில் குளிக்கும் அமைச்சர்: வைரல் போட்டோ!

0
உத்தரப்பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா நந்தி, தன் கட்சித் தொண்டர் வீட்டில் குளிக்கும் காட்சி சமூக வலைதளங்களீல் வைரலாகியுள்ளது. உத்திர பிரதேச மாநில அமைச்சர் நந்தகோபால் வெளியூர்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லும்போது, அங்குள்ள...