பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் ‘தக்ஸ்’!

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் ‘தக்ஸ்’!
Published on

-லதானந்த்

நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு 'தக்ஸ்' எனப் பெயரிட்டிருக்கிறார்கள். 

குமரி மாவட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட ஆக்ஷன் கதையாம் இது!

நடிகர் ஹிர்ருது ஹாரூன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் நடிப்பில் தேசிய விருது பெற்ற நடிகரான சிம்ஹா கரம் கோர்க்கிறார்.

நடிகர் ஆர். கே. சுரேஷ், தக்ஸுகளை எதிர்த்து போரிடும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். நடிகர் முனீஸ்காந்த், 'தக்ஸ்' கூட்டத்தில் ஒருவராக களம் இறங்குகிறார். பிரியேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, சாம் சி. எஸ். இசையமைக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். மூன்று பிரபலமான முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றுகிறார்கள்.

தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நடைபெற்று வருகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com