மை டியர் பூதம்; குழந்தைகளின் ஃபேன்டஸி!

மை டியர் பூதம்; குழந்தைகளின் ஃபேன்டஸி!

-ராகவ் குமார் 

மிழ் சினிமாவில் குழந்தைகளுக்காகவே 'மை டியர் பூதம்' படத்தைத் தந்துள்ளார் டைரக்டர் ராகவன். குழந்தைகளுக்கான இந்த படத்தில் ஹீரோ பூதமாக பிரபு தேவா!  யோசிப்பதற்கே வித்தியாசமாக இருப்பது போன்று படமும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.  

பூத லோகத்தின் தலைவனும் அவனது மகனும் ஒரு முனிவரின் தவத்தை கலைத்து விடுகிறார்கள். கோபம் கொண்ட முனிவர் ''நீ பூமியில் சிலையாக பிறக்க வேண்டும். உன் சிலையை எவன் கண்டு மீட்கிறானோ அவன் உன் மீது சொல்லும் மந்திரம் மூலமாகத்தான் நீ மறுபடி பூதலோகத்திற்கு வர முடியும்'' என்று சாபம் இடுகிறார்.   

அந்த வகையில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பள்ளி சிறுவன் பூத தலைவனை மீட்டு எடுக்க, அச்சிறுவன் விரும்பும் அனைத்து விஷய ங்களையும் பூதம் தன் மந்திரத்தால் செய்து தருகிறது. ஒரு கட்டத்தில் பூதம் சிறுவன் வாயால் மந்திரத்தை சொல்ல வைத்து பூதலோகம் செல்ல விரும்புகிறது. இது சாத்தியமானதா என்பது மிச்சமுள்ள கதை! அதை நகைசுவை தளத்தில் சொல்லி இருக்கிறார்  டைரக்டர்.   

இது குழந்தைகளுக்கான படம் என்றாலும் பெரியவர்களும் இப்படத்தைப் பார்கும்போது மனதளவில் குழந்தைகளாக மாறி விடுவார்கள் என்பது நிச்சயம். இந்த படம் அத்தகைய மேஜிக்கை செய்கிறது. 

படத்தின் ஹீரோவான நடனப் புயல் பிரபு தேவா, மொட்டை அடித்து உச்சியில் கொண்டை வைத்து ஆச்சரிய பட வைக்கிறார். நடிப்பில் ஒவ்வொரு காட்சியியிலும் ஈர்க்கிறார். சிறுவன் அஸ்வந்த் தன்னை சக மாணவர்கள் கிண்டல் செய்யும்போது உடைந்து போவதும், பூதத்திற்கு நல்ல நண்பனாக இருப்பதும் என நடிப்பில் அசத்தல்! uk செந்தில் குமாரின் கேமரா அசத்தல். டி. இமானின் இசையில் யுக பாரதியின் வரிகள் உணர்வுகளை வார்த்து எடுக்கிறது

குழந்தைகளுக்கான ஃபேன்டஸி(கற்பனை ) உலகத்தை திரையில் கொண்டு வருவது கடினம். இதை சரியாக தந்த டைரக்டர் ராகவனை பாராட்டலாம். மை டியர் பூதம்அனைவருக்கும் பிடித்த பூதம் . 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com