10 ரூபாய்க்கு பிரிஞ்சி: நடிகர் கார்த்தி அசத்தல்!

10 ரூபாய்க்கு பிரிஞ்சி: நடிகர் கார்த்தி அசத்தல்!

Published on

-லதானந்த்

நடிகர் கார்த்தி ரசிகர் மன்ற தலைமை அலுவலகம் வளசரவாக்கத்தில் செய்லபடுகிறது. இந்த அலுவலகத்தின் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ரூ.50 மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் (வெஜிடபிள் பிரியாணி) ரூ 10-க்கு வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி சுத்தமான முறையில் செயல்பட்டு வரும் இந்த உணவகம், கடந்த 300 நாட்களாகச் செயல்படுகிறது. அப்படி 300-வது நாளை ஒட்டி இனிப்பும் இலவசமாக வழங்கப்பட்டது.  

''தினசரி சராசரியாக 100 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள், ஊருக்கே உணவு சப்ளை செய்யும் ஸ்விக்கி, ஜூமோட்டோ டெலிவரி பாய்கள் போன்றோர் இந்த உணவகத்தில் தினசரி உணவு உட்கொள்கிறார்கள்.

லாப நோக்கம் எதுவுமின்றி, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் கார்த்தியின் ஆதரவுடனும் வழிகாட்டுதலுடனும் இந்த உணவகம் செயல்படுகிறது'' என்றார்கள், கார்த்தி ரசிகர்மன்றத்தினர்.

logo
Kalki Online
kalkionline.com