#BoycottRRRinKarnataka: கர்நாடகாவில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பிரபலமாகும் எதிர்ப்பு!

#BoycottRRRinKarnataka: கர்நாடகாவில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பிரபலமாகும் எதிர்ப்பு!

இயக்குனர் ராஜமௌலி பிரமாண்டமாக உருவாக்கியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்.' படத்துக்கு கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவித்து  #BoycottRRRinKarnataka  என்ற ஹேஷ்டேக்கை பிரபலப் படுத்தி வருகின்றனர்.

இயக்குனர் ராஜமவுலியின் பிரமாண்ட தயாரிப்பான 'ஆர். ஆர்.ஆர்' திரைப்படம் நாளை மறுநாள் (மார்ச் 25) உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ளனர். சுமார் 400 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளதாக தெரிவிக்கப் பட்டது.

ஆனால் இந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யாமல், தமிழ், தெலுங்கு, இந்தியில் மட்டுமே கர்நாடாகாவில் வெளியாக உள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனால் அம்மாநில சினிமா ரசிகர்கள் #BoycottRRRinKarnatakaஎன்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ட்விட்டரில் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை புறக்கணியுங்கள்'' என்று ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பட வெளியீட்டு நிகழ்ச்சியில், கர்நாடக முதலமைச்சர் கலந்து கொண்டு படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்திருந்தார். அதேபோல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தை, கன்னட மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டும் என்று, ராஜமௌலியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் கன்னட மொழியை புறக்கணித்து விட்டு ''பான் இந்தியா படன்'' என இப்படத்துக்கு இயக்குனர் ராஜமெளலி பிரச்சாரம் செய்வதால் கன்னட ரசிகர்கள் இந்த படத்திற்கு எதிராக எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர். மேலும்இந்த படத்திற்கு முன்னதாக வெளியான 'புஷ்பா', 'ராதே ஷ்யாம்' படங்களும் கன்னட மொழியை புறக்கணித்ததாக கன்னட ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com