நெஞ்சுக்கு நீதி; சமூக நீதிக்கான போராட்டம்!

நெஞ்சுக்கு நீதி; சமூக நீதிக்கான போராட்டம்!

-ராகவ் குமார்.

'ஆர்ட்டிகள் 15' என்ற இந்தி படத்தின் மைய்ய கருவை எடுத்துகொண்டு தமிழ் சூழலுக்கு ஏற்றார்போல் 'நெஞ்சுக்கு நீதி'யை இயக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.  இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ரோமியோ பிக்ச்சர் ராகுல் தயாரித்து உள்ளார்கள்.

கதையின் நாயகன் உதயநிதி ஸ்டாலின். வெளிநாட்டில் படித்து உடுமலை பகுதியில் போலீஸ் அதிகாரியாக நியமிக்க படும் விஜய ராகவனுக்கு (உதயநிதி ) அப்பகுதியில் உள்ள சில சமூகத்தினர் ஒடுக்கப் படுவது பிடிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்தில் தூக்கில் தொங்கி இறந்த இரண்டு சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப் படுகின்றன். ஒரு சிறுமி காணாமல் போகிறாள். இற்ந்த சிறூமிகளின் போஸ்ட் மாட்டம் அறிக்கையில் அச்சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதாக தெரிவிக்கிற்து. ஆனால் அதிகார வர்க்கம் 'இது வெறும் ஆணவ கொலை' என பதிவு செய்து, இறந்த சிறுமிகளின் குடும்பத்தினரை கைது செய்கிறது. ஆனால் உதயநிதி இதை ஏற்று கொள்ளாமல் உண்மையை கொண்டு வர போராடுகிறார்.

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க முயல்கிறார்.அதிகார வர்க்கம் இவரது முயற்சிக்கு ஒத்துழைப்பு தாராமல் குற்றம் செய்தவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்கிறது.

காவல் அதிகாரி உதயநிதி இதை எப்படி எதிர்கொண்டார் என்பதை அழகான திரை மொழியில் சொல்லியுள்ளார் இயக்குனர் அருண் ராஜா. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் எளிய மக்களின் வலியை மௌனமாக கடத்தியுள்ளார். பொது புத்தியில் உறைந்து போன ஜாதியை பற்றிய எண்ணங்கள் காவல்துறை உட்பட பல்வேறு துறைகளில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை மிக வெளிப்படையாகவே சொல்லிருக்கிறார்.

உதயநிதி அடக்கமான அதே சமயத்தில் சரியாக உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்துள்ளார். சக போலீஸ்காரர்கள் ஜாதியை பற்றி பேசும் போது பார்க்கும் ஒரு பார்வை அபாரம்!

தனது உடன் இருக்கும் அதிகாரியே பாலியல் வன்புணர்வில் ஈடுபடுள்ளார் என்பதை கேள்விப்பட்டு அந்த நபரை ஒரு பார்வை பார்க்கிறார்.மிக  பிரமாதம் . ஆரியின் நடிப்பு சமூக கோபமும் ஆற்றாமையும் கலந்து உள்ளது. தான்யா, இளவரசு, சக்ரவர்த்தி என பலரும் கதா பா த்திரத்திற்கு பொருந்தி போகிறார்கள்.

இரவில் படமாக்க பட்ட பல காட்சிகள் நமக்கு ஒரு வித அச்ச உணர்வை     தருகிறது. "எல்லா ஜாதிக்கும் பிரச்சனை இருக்கு. ஆனா எனக்கு ஜாதியே பிரச்சனையாக இருக்கு'' என்பது  போன்ற வசனங்கள் படத்திற்கு கூடுதல் சிறப்பு. மொத்தத்தில் நெஞ்சுக்கு நீதி – சமூக நீதிக்கான போராட்டம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com