0,00 INR

No products in the cart.

தூங்காத உண்மை: “ராக்கெட்ரி -தி நம்பி எபெக்ட்’’ பட டிரெய்லர்!

-ராகவ் குமார்.

அது 90-களின் காலகட்டம். நேர்மையான ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வேலை பார்த்ததாக காவல் துறை கைது செய்து, சிறையில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானர் நம்பி.

பல்வேறு பத்திரிகைகள் இவரை மிக  மோசமாக சித்தரித்தன. நம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் ஒருவர் நம்பி நாராயணனின் ஜாதியையும் சேர்த்து வசை பாடினார்.  சில ஆண்டுகளுக்கு பின்பு நம்பி தன் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பதையும், அதிகார வர்க்கம் தன்னை பழி வாங்கவே இவ்வாறு செய்தது என்பதையும் நீதிமன்றத்தில் நிரூபித்து விடுதலை ஆனார்.

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த இந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து நடிகர் மாதவன் “ராக்கெட்ரி -தி நம்பி எபெக்ட் ” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட விஞ்ஞானி நம்பியாக மாதவனே நடிக்கிறார்.   இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் துபாயில் வெளியிடப்பட்டது.

‘’காலம் கடந்து தாமதமாகக் கிடைக்கும் நீதி அநீதிக்கு சமம் என்பார்கள்.நம்பிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு வெள்ளித்திரையில் நியாயம் தேடி தர முயற்சித்திருக்கிறோம்’’ என்று உணர்வுபூர்வமாக பேசினார் நடிகர் மாதவன். இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு விஞ்ஞானி நம்பி நாரயணன் வந்திருந்தது குறிப்பிடத் தக்கது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

விக்ரம் 2-விலும் லோகேஷ்தான் இயக்குனர்: கமல்ஹாசன் அறிவிப்பு!

0
கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது அதில் கமல்ஹாசன் பேசியதாவது: கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி விக்ரம் படம் ரிலீஸாக...

அன்னை இல்லத்திலிருந்து அடுத்த நடிகர்!

0
-லதானந்த். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து மற்றொரு கலையுலக வாரிசு உருவாகியுள்ளார்.  நடிப்புப் பல்கலைக்கழகமான சிவாஜியின் அன்னை இல்லத்திலிருந்து அவரது மகன் பிரபு, பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் போன்றவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது...

நெஞ்சுக்கு நீதி; சமூக நீதிக்கான போராட்டம்!

0
-ராகவ் குமார். ‘ஆர்ட்டிகள் 15’ என்ற இந்தி படத்தின் மைய்ய கருவை எடுத்துகொண்டு தமிழ் சூழலுக்கு ஏற்றார்போல் ‘நெஞ்சுக்கு நீதி’யை இயக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.  இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ரோமியோ பிக்ச்சர்...

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 

0
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.அதையடுத்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ மற்றும் அண்மையில் வெளிவந்த ‘ராஜவம்சம்’...

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

0
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது; சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த...