19 ஆண்டுகளுக்குப் பின் நாட்டுக்கு பதக்கம்; நீரஜ் சோப்ரா சாதனை! 

19 ஆண்டுகளுக்குப் பின் நாட்டுக்கு பதக்கம்; நீரஜ் சோப்ரா சாதனை! 

லக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தன் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

அமெரிக்காவில்  நடைபெற்று வரும்  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் ரோஹித் யாதவ் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்

இந்நிலையில் நேற்று (ஜூலை 24) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்முன்னதாக அவர்  டோக்கியோ ஒலிம்பிக்ஸ்சில் ஈட்டி எறிதலில்  தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியிலும் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.

இந்நிலையில் தற்போது  உலக தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் 2-வது இந்திய வீரர் மற்றும் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமை நீரஜ் சோப்ராவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதுஇந்நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

இந்நிலையில் பிரதமர் மோடி தன் டிவிட்டர் பக்கத்தில் நீரஜ் சோப்ராவை பாராட்டி வெளியிட்டுள்ளதாவது:

நாட்டுக்கு திறமையான வீரர் மூலம் கிடைத்த சிறப்பான வெற்றி. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துக்கள்.அவரது சாதனை இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு சிறப்பான தருணம்.

-இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com