0,00 INR

No products in the cart.

அசோக் செல்வனின் ஹாஸ்டல்!

-ராகவ் குமார்.

சோக் செல்வன் இன்றைய தமிழ் திரையுலகின் இளம் ஹாட் ஸ்டார்! சமீபத்தில் இவர் நடித்த மன்மத லீலை திரைப்படம், பரவலாக வரவேற்பை பெற்றது. காரசார விமர்சனங்களுக்கும் உள்ளானது. அதேபோல் அசோக் செல்வன் நடிப்பில் இம்மாத இறுதியில் வெளிவருவுள்ள ‘ஹாஸ்டல்’ திரைப்படம் இளைஞர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘ஹாஸ்டல்’ ட்ரைலர் ரிலீஸ் ஆகி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்து உள்ளது.டைட்டிலே பாதி கதையை சொல்கிறது எனலாம். ‘ஹாஸ்டல்’ என்று டைட்டிலில் எழுதி விட்டு, அதன் கீழே boys only என்று எழுதி உள்ளார்கள்.boys என்ற வார்த்தையை பெருக்கல் குறியால் அடித்து உள்ளார்கள்

டைரக்டர் பெயரிலும் A sumanth ராதாகிருஷ்ணன் film என்று முதல் பாதி ஆங்கிலத்திலும் இரண்டாம் பாதி தமிழிலும் உள்ளது. படத்தின் ட்ரைலரில் நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் வேறு. இதை பலரும் பலவிதமாக விமர்சித்து கொண்டு உள்ளார்கள். இது போதாது என்று நடிகர் நாசர் வெள்ளை அங்கி அணிந்த கிறிஸ்துவ பாதடராக காட்சியளிக்க, நடிகை பிரியா பவானி சங்கர் பர்தா அணிந்து ட்ரைலரில் தோன்றுகிறார். 

இப்படி மதக் குறியீடுகளை பரபரப்புக்காக டைரக்டர் பயன்படுத்துகிறாராஅசோக் செல்வன் தேர்ந்தெடுத்து நடிக்கும் இது போன்ற அடல்ட்ஸ் ஒன்லி  படங்கள் ஹாஸ்டலிலும் கை தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

0
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது; சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த...

புழு; திரைப்பட விமர்சனம்!

1
-தனுஜா ஜெயராமன்  கேரள மம்முட்டி நடிப்பில் புதுமுக பெண்இயக்குனர் ரதீனா இயக்கிய மாறுபட்ட மொழிமாற்ற (தமிழில்) திரைப்படம் புழு.  முதலில் இப்படியான நெகடிவ் கேரக்டரில் நடித்த மம்முட்டியின் துணிவு பாராட்டுக்குரியது. பல்வேறு முகபாவங்களில் பல்வேறு உணர்ச்சிகளை...

டான்; அறியும் தேடல்!

0
-ராகவ் குமார் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ள கல்லூரி கதை டான். சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார். ‘நமது பிள்ளைகளை விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க விடுங்கள்’ என...

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார். மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக...

தொண்டர் வீட்டில் குளிக்கும் அமைச்சர்: வைரல் போட்டோ!

0
உத்தரப்பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா நந்தி, தன் கட்சித் தொண்டர் வீட்டில் குளிக்கும் காட்சி சமூக வலைதளங்களீல் வைரலாகியுள்ளது. உத்திர பிரதேச மாநில அமைச்சர் நந்தகோபால் வெளியூர்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லும்போது, அங்குள்ள...