விக்ரம் 2-விலும் லோகேஷ்தான் இயக்குனர்: கமல்ஹாசன் அறிவிப்பு!

விக்ரம் 2-விலும் லோகேஷ்தான் இயக்குனர்: கமல்ஹாசன் அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது அதில் கமல்ஹாசன் பேசியதாவது:

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி விக்ரம் படம் ரிலீஸாக உள்ளது இது திட்டமிட்ட ஒன்றல்ல.. ஆனால் சினிமா தொடர்பாக கலைஞரைப் பற்றிச் சொல்ல ஆயிரம் பக்கங்கள் பத்தாது  அவர் பிறந்தநாளன்று என்  படம் வருவது எதேச்சையான ஒன்று. சினிமா என்பது ஒரு தனி மொழி. உலகளாவிய அந்த சினிமா மொழியில் என் தனித் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு கலைஞரும் ஒரு முக்கிய காரணம்.

இந்தியன்2 வெளியாகும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். விக்ரம் படத்தின் அடுத்த பாகமும் வெளியாகும். அதற்கும் லோகேஷ் கனகராஜ்தான் இயக்குனராக பணியாற்றுவார் அது நான் எடுத்த முடிவு. அதேபோல் இந்தியன்-2 படம் வெளியாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

-இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்..

logo
Kalki Online
kalkionline.com