3 நாளில் 112K Followers; லெஜண்ட் சரவணன் அசத்தல்!

3 நாளில் 112K Followers; லெஜண்ட் சரவணன் அசத்தல்!

பிரபல சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் சொந்தமாக தாயரித்து கதாநாயகனாக அறிமுகமாகும்  'தி லெஜண்ட்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் ஜேடிஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. அண்மையில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் லெஜண்ட் சரவணன், சமூக வலைத்தள பக்கமான ட்விட்டரில் இணைந்தார். இதையடுத்து ஓரிரு நாட்களிலேயே  112K Followers பெற்று அசத்தியுள்ளார். 

'தி லெஜண்ட்' படம் வெளியானதும் லெஜண்ட் சரவணனுக்கு இன்னும் Followers அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com