0,00 INR

No products in the cart.

அழகு -துணிவு –அதுல்யா!

-ராகவ் குமார்.

பி மாநில பெண்கள்  கதாநாயகியாக கோலோச்சும் தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் தமிழ் பெண்களும் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்கள்.

அப்படி அக்மார்க் தமிழ் பெண்ணான அதுல்யா  ரவிக்கு இளைஞர்கள் மட்டுமல்லாமல் இளம் பெண்களும்  ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. காரணம் அம்மணியின் நடிப்பும் முகமும் தங்கள் வீட்டு பெண்ணை போன்று இருப்பதுதான்! 

அதுல்யா ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் தன் திறமையை காட்டும் ஒரு படத்திற்காக காத்து  கொண்டிருக்கிறார். வெற்றி செல்வன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும்எண்ணித் துணிக’ படம் திரைப்படம் தனக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்று உறுதியுடன் இருக்கிறார்.ஜெய் உடன் இப்படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார். இதுவரை பார்க்காத கேரக்டர்களில் ஜெய்யும், அதுல்யாவும் நடித்து இருக்கிறார்களாம்.  

வாழ்கையில் வெற்றி பெற துணிவும்,தன்னம்பிக்கையும் தேவை. சினிமாவில் வெற்றி பெற இன்னமும் அதிகம் இது வேண்டும். துணிந்தால் வாழ்க்கை மாறும் எண்ணித்  துணிக படம் சொல்கிறது.திருக்குறளின் முதல் வரியை டைட்டிலாக வைத்தது என்னை ஈர்த்ததுஎன்கிறார் அதுல்யா.

நம்ம கோயம்புத்தூர் பெண்ணின் துணிவும் நம்பிக்கையும் வெற்றி பெற எண்ணித் துணிக டீமின் வெற்றிக்கு வாழ்த்துவோம்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

0
லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும்  இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக  காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.   சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...

தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைப்பில் ‘ஹர் கர் திரங்கா’ ! 

0
-லதானந்த்.  'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்திப் பாடல், வெளியிடப்பட்ட  சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.   தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும்...

வேட்டி கட்டி அசத்திய வெளிநாட்டு செஸ் வீரர்! 

0
-காயத்ரி.  மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், அவர்களின் நாட்டு கலாச்சாரத்தை பிரபலிக்கும் வகையில் வண்ண...

நான்கு கதை, நான்கு திசை, நான்கு பார்வை! 

0
-ராகவ் குமார்.   சோனி லைவ் தளத்தில் வெளியான ‘விக்டிம்’  திரைப்படம் ரொம்பவே வித்தியாசமானது. இந்த ஒரே திரைப்படத்தில் 4 வெவ்வேறு கதைகளை 4 பெரிய இயக்குனர்களான பா. ரஞ்சித், எம் . ராஜேஷ்,  சிம்பு...

போர் ஊற்றி எழுதிய காதல் காவியம் ‘சீதா ராமம்’! 

0
-லதானந்த்  நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம், ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ்,...