0,00 INR

No products in the cart.

‘அவதார்’ படத்தின் 2-ம் பாகம்; டிசம்பர் 16-ல் வெளியீடு!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் பிரமாண்டமான வெற்றி பெற்ற படம்  ‘அவதார்‘. இந்தப் படத்தின் 2-ம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுக்க சுமார் 160 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ’அவதார் 2’  படத்தின் டிரெய்லர் மே 6-ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் காட்சிகள் சினிமாகான் 2022′ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப் பட்டது. அந்த வகையில்  ‘அவதார்‘ 2-ம் பாகத்தின் பெயர் ‘Avatar: The Way of Water என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அவதார் முதல் பாகத்தைப் போல இப்படமும் ஸ்பெஷல் எஃபக்டுகளுடன்  உலக சினிமா வரலாற்றில்  சிறந்த உருவாக்கத்திற்கான  சாதனையைப் படைக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

டான்; அறியும் தேடல்!

0
-ராகவ் குமார் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ள கல்லூரி கதை டான். சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார். ‘நமது பிள்ளைகளை விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க விடுங்கள்’ என...

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார். மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக...

தொண்டர் வீட்டில் குளிக்கும் அமைச்சர்: வைரல் போட்டோ!

0
உத்தரப்பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா நந்தி, தன் கட்சித் தொண்டர் வீட்டில் குளிக்கும் காட்சி சமூக வலைதளங்களீல் வைரலாகியுள்ளது. உத்திர பிரதேச மாநில அமைச்சர் நந்தகோபால் வெளியூர்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லும்போது, அங்குள்ள...

சாணிக் காயிதம்: வன்முறை டூ மச்!

0
-லதானந்த். பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன பழிவாங்கல்தான் கதை. அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. நல்லவேளை இது தியேட்டரில் வெளியாகவில்லை; வெளியாகியிருக்கவும் முடியாது – அவ்வளவு வன்முறை. நமக்குத் தீங்கிழைத்தவர்களுக்குச் சட்டம் கொடுக்கும் தண்டனை போதாது;...

8 ஆயிரம் மீட்டருக்கு மேல் 5 சிகரங்கள்; எட்டிப் பிடித்த முதல் இந்தியப்பெண்!

0
மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா பகுதியைச் சேர்ந்த  பிரியங்கா மோஹிதே என்ற இளம்பெண் இமயமலையில் 8 ஆயிரம் மீட்டருக்கு உயரமான 5 சிகரங்களை எட்டிப் பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.  இதுகுறித்து...