4 நொடி பிரகாசம்: வியாழனில் ஒளிர்ந்ததை பதிவுசெய்த வானியலாளர்கள்!

4 நொடி பிரகாசம்: வியாழனில் ஒளிர்ந்ததை பதிவுசெய்த வானியலாளர்கள்!

கடந்த வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 15) வியாழன் கோளில் சுமார் நான்கு நிமிடங்கள் மட்டும் பிரகாசமான ஒளி தோன்றியதாக வானியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

நமது விண்வெளியில் வாயுக்கோள் என்று அழைக்கப்படும் வியாழனில் புவியீர்ப்பு விசை அதிகமாக காணப்படுகிறது. மேலும் பூமியை நோக்கி வரும் விண்கற்களை இந்த கிரகம் ஈர்த்து கொள்வதால், 'பூமியின் பாதுகாவலன்' என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டில், கியோட்டோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுக்குழு கடந்த அக்டோபர் 15-ம் தேதி வியாழன் கோளில் பிரகாசமான ஒளி சுமார் நான்கு நொடிகளுக்கு ஒளிர்ந்ததை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

வியாழன் கோளில் ஏதோ ஒரு மர்ம பொருள் மோதியதால் தான் இந்த பிரகாச ஒளி தோன்றியதாக ஜப்பான் வானியல் அறிஞர்கள் தெரிவித்தனர். இதை பிரெஞ்சு வானியல் சங்கத்தின் மார்க் டெல்க்ரோயிக்ஸ் போன்ற விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com