பிக்பாஸ்-ல கலந்துக்க வந்த செலவுகூட சம்பளமா கிடைக்கலை: மலேசிய மாடல் நாடியா சாங்!

பிக்பாஸ்-ல கலந்துக்க வந்த செலவுகூட சம்பளமா கிடைக்கலை: மலேசிய மாடல் நாடியா சாங்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

பிரபல டிவி சேனல் ஒன்றில் நடந்துவரும் பிக் பாஸ் சீசன் – 5 தொடரை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்ற உறுப்பினர்களில் மலேசியாவிலிருந்து வந்த மாடலான நாடியா சாங் போட்டியிலிருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் சீசன் 5ல் நிகழ்ச்சியில் பங்கேற்ற 18 போட்டியாளர்களில் நாடியா சாங்கும் ஒருவர். அவர் நிகழ்ச்சியின்போது தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை, தன் தாய் மற்றும் கணவர் சாங் சூன் குறித்து கண் கலங்கி பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தார். அவரது கணவர் சாங் சூன் ஹுவாத் யார் என இணையதளத்தில் பலரும் தேடும் அளவுக்கு தனது கணவருக்கு புகழை தேடி தந்தார் நாடியா. இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நாடியா தேர்வாகி, வெளீயேற்றப்பட்டார். இதுகுறித்து நாடியா தெரிவித்ததாவது:

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மலேசியாவிலிருந்து வந்த செலவு,ஹோட்டலில் தங்கிய செலவு என ஏகப்பட்ட செலவு ஏற்பட்டதுதான் மிச்சம். இந்த போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் பிக் பாஸ் வீட்டில் இரண்டு வாரத்திற்கு தங்கியிருந்தேன். அதற்காகக் கொடுக்கப் பட்ட சம்பளம் மிகக் குறைவு. இதற்காக நான் செலவழித்ததைவிட மிகவும் குறைவு.

-இவ்வாறு நாடியா வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். நாடிய சாங்கிற்கு மலேசியாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு என்றாலும், அவர்களால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்களிக்க முடியாததால், நாடியா குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com