பெட்ரோல் தேவையில்லை: பேட்டரியில் இயங்கும் ஆட்டோ!

பெட்ரோல் தேவையில்லை: பேட்டரியில் இயங்கும் ஆட்டோ!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் டவுன் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஆலிவர் என்பவர் பேட்டரியில் இயங்கும் ஆட்டோவை  ஓட்டி வருவது அப்பகுதியில் புதுமையாக காணப்படுகிறது. இதுகுறித்து ஜோசப் கூறியதாவது,

வெளியூரில் டிரைவராக பணிபுரிந்த நான்,  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியதும் சுயதொழில் மேற்கொள்ள ந்னைத்து, சொந்தமாக ஆட்டோ ஓட்ட முடிவெடுத்தேன். ஆனால் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலையேறிக் கொண்டே இருப்பதால் கட்டுப்படியாகவில்லை. அப்போதுதான், தெலுங்கானாவில் ஒரு நிறுவனம் பேட்டரியில் இயங்கும் பசுமை ஆட்டோக்கள் தயாரித்து விற்பதை அறிந்து, அன்ங்கு இந்த ஆட்டோவை விலைக்கு வாங்க் வந்தேன். பெட்ரோல் செலவு மிச்சம் என்பதால், அதிக லாபம் கிடைக்கிறது. இந்த ஆட்டோவில் பொருத்தப்பட்டிருப்பது 48 வோல்ட் லித்தியம் பேட்டரி ஆகும். சுமார் 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவை ஓட்டலாம். கூடுதலாக சோலார் பேனலும் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு 3 ஆண்டு உத்தரவாதம் உள்ளது. இந்த ஆட்டோ மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்தவகை ஆட்டோக்களுக்கு விரைவில் அதிக டிமாண்ட் ஏற்படும் என்று கருதுகிறேன்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com