உலகின் உயரமான சாலை; லடாக் சாலைக்கு கின்னஸ் அங்கீகாரம்!

உலகின் உயரமான சாலை; லடாக் சாலைக்கு கின்னஸ் அங்கீகாரம்!

உலகின் மிக உயரமான சாலையாக இந்திய எல்லையில் அமைந்துள்ள லடாக் சாலை கின்னஸ் சாதனை படித்துள்ளது. இதற்கும் பொலிவியாவில் உள்ள 18,953 அடி உயரத்தில் உள்ள சாலையின் சாதனையை முறியடித்து லடாக்க்கு இந்த் கவுரவம் கிடைத்துள்ளது

லடாக்கின் உம்லிங்கா கணவாயில் 19,024 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான மோட்டார் வாகன சாலையாக அங்கீகரித்து கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை இந்திய எல்லைப்புற சாலைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜென்ரல் ராஜீவ் சவுத்திரி பெற்றுக் கொண்டார். காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ நடுவர் ரிஷிநாத் இந்த அங்கீகாரத்தை வழங்கினார்.

இதுகுறித்து இந்திய எல்லைப்புற சாலைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜென்ரல் ராஜீவ் சவுத்திரி கூறியதாவது:

இந்தியாவின் எல்லைப்பிறத்தில் லடாக்கில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான இந்த சாலையை கின்னஸ் நிறுவனம் நான்கு மாத காலம் ஆய்வு செய்து பிறகு சான்றிதழ் வழங்கியுள்ளது. அந்த வகையில் இதற்குமுன் இந்த சாதனை படைத்த பொலிவியாவின் 18,953 அடி உயரத்தில் உள்ள உட்டுருங்கு எரிமலையை இணைக்கும் சாலையின் சாதனையை முறியடித்து, இந்தியா கின்னஸில் இடம்பிடித்துள்ளது. பாதுகாப்பு ரீதியில் மிக முக்கியமான இந்த சாலை எல்லைப் பகுதிகளில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு சான்றாக விளங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com