உளுந்து சட்னி

உளுந்து சட்னி

Published on

தேவை:
உளுந்தம் பருப்பு அரை ஆழாக்கு
தேங்காய் துருவல் கொஞ்சம்
காய்ந்த மிளகாய் – 3
புளி சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :-
அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, உளுந்தம் பருப்பைப் பொன் நிறமாக வறுக்கவும். பின் அதனுடன் காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், புளி சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் நைசாக அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு தாளித்து, சட்னியுடன் கலந்து பரிமாறவும். இட்லி, தோசை, ஊத்தப்பம் எல்லாவற்றுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com