
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது உத்தரபிரதேச போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.
இதையெடுத்து, தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையை பிரியங்கா காந்தி தானே விளக்குமாறால் சுத்தம் செய்யும் காட்சி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளீன் குடுபத்தினரை தான் சந்திக்க விடாமல் தடுத்த காவல்துறையினரை கண்டித்து பிரியங்கா காந்தி உண்ணாவிரதம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.