ஆரம்பமே அசத்தல்!

ஆரம்பமே அசத்தல்!
Published on

உங்கள் குரல்

ர்வதேச சந்தையின் நிலைக்கேற்ப நம் நாட்டின் எரிபொருட்களின் நிலையை மாற்றி அமைக்கும் முறை குழித்தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது என்று சாடிய "பிரதமரே கருணைக் காட்டுங்கள்" கல்கியின் தலையங்கம்,  எதிர்க்கட்சி நிலையில் இருந்தபோது எரிபொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்த பா.ஜ.க., இன்று வேறுபட்ட நிலையை எடுத்துள்ளதையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை!‌‌  இந்நிலையை
கவனிக்கும் போது,

"நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்"
– என்ற கவியரசரின் பாடல் வரிகளே  செவிகளில் மோதுகிறது.

மத்திய அரசு செவி சாய்த்து கருணை காட்டும் என்று நம்புவோம்!

நம்பிக்கைதானே வாழ்க்கை!
                                                    – திருவரங்க வெங்கடேசன்,  பெங்களூரு

'அருள்வாக்கு' பகுதியில் 'அம்மா' பற்றிய விஷயங்கள் அற்புதமாக இருந்தது. படிக்கப் படிக்க பேரானந்தமான அன்பு மழையில் நனைந்தேன். அத்தனை விஷயங்களும் மனதை விட்டு அகல மறுத்தது நிஜம்.
                                                                      – நாகராஜன், செம்பனாா்கோவில்

ராசாரின் அனைத்து பதில்களும் அறிவு களஞ்சியம். 'தட்சணை, வரதட்சணை' குறித்த கேள்விக்கு தராசாரின் பதில் அற்புதம். 'பொது இடம் எது என்பதை நீதிமன்றம் விளக்க வேண்டும்' என்ற தராசார் பதில் 'நல்ல  கேள்வி'. ஏனெனில், சிலைகளை அகற்றும் விஷயத்தில் சிலைகளை  வைத்தவர்கள் 'அனுமதிப்பெற்று, முறைப்படி , சட்டப்படி' வைத்ததாக விவாதிப்பார்கள்தானே?
                                                                    – ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

'அண்ணாத்தே வந்த பாதை' தொடர் அறிவிப்பு இல்லாமல் ஆச்சரியப்படுத்தி விட்டீர்கள். ஆரம்பமே அசத்தல்!
                                                                         – மைதிலி வெங்கடேசன், திருச்சி

'வலசை' அறிமுகம் படித்தவுடன் புத்தகம் ஆர்டர் செய்துவிட்டேன். ஆவலைத்தூண்டிய அறிமுகம்!                                 – சங்கர் புதுக்கோட்டை

விஞ்ஞான விஷயங்களை எளிதாகப் புரியும்படி சொல்வதில் கல்கிக்கு நிகர் கல்கிதான். 'ஹைப்பர் லூப்' பற்றிய பேட்டி அருமை. பேட்டியை எழுதிய
ராசி பாஸ்கருக்கும், ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானிக்கும் பாராட்டுகள்.
                                                                    – சந்திரமோஹன், திருவனந்தபுரம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com