0,00 INR

No products in the cart.

உஷ்ணம் போக்கும் கேப்பைக் கூழ்!

வாசகர் ஜமாய்க்கிறாங்க

தொகுப்பு : பொ.பாலாஜிகணேஷ்

ராகி – சிறு தானிய வகையைச் சேர்ந்த இது, மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடியது. இதில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும்.
இவ்வகை சிறு தானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால், இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. இவை உறுதியான உடலமைப்பைத் தந்து, உழைக்கும் மக்களின் உடல் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்கிறது.

சிறு தானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்தத் தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன.

மேலும், இவற்றை அதிகளவில் உட்கொள்ளும்போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து, மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டது.

கேப்பை எனப்படும் கேழ்வரகு :
இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் விளையும் சிறு தானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட, அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்தது.
இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. உடலுக்கு வலிமை தரும் கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் ஆகியவை உள்ளன. இதுதவிர, பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.

எனவேதான், ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறு குழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டு கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும் திகழ்ந்து வந்துள்ளனர். கேப்பையை கூழாகச் சாப்பிடுவதை விட, ரொட்டி போல செய்தும் சாப்பிடலாம்.
ஏனெனில், கூழாக உண்ணும்போது சீக்கிரம் ஜீரணமாகி விடும். விரைவில் பசி எடுக்கும். ரொட்டி ஜீரணமாக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால், பசி தாமதமாக எடுக்கும். ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் களி செய்து உண்கின்றனர்.

இது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்.

தினம் ஒரு இஞ்சித் துண்டு; நன்மைகள் பல அதில் உண்டு!

தினமும் ஒரு துண்டு இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்! ஏன் தெரியுமா?
இஞ்சி காரமான சுவையுடையது. இதனை தேநீருடன் சேர்த்துக் குடிப்பது மிகவும் நல்லது.அதிலும், காலை வேளையில் இஞ்சி கலந்த டீ குடிப்பது, காய்ச்சலுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.

ஒற்றைத் தலைவலியைப் போக்க :
பொதுவாகவே, தலைவலியைப் போக்க நாம் எல்லோரும் முதலில் டீதான் அருந்துவோம். அதிலும் இஞ்சி கலந்த டீயை அருந்துவது, எந்த மருந்து எடுத்துக்கொண்டாலும் தீராத வலியைக் கொடுக்கும் ஒற்றைத் தலைவலியைப் போக்கும் வலிமை கொண்டது. தலைவலியைப் போக்கி, உங்களை சுறுசுறுப்பாக மாற்ற இஞ்சி கலந்த டீயை எடுத்துக் கொள்ளலாம்.

மூட்டு வலியைப் போக்க :
பல வயதான பெரியோர்களை வேதனைக்குள்ளாக்கும் வலி எது எனில், அது மூட்டு வலிதான். மூட்டு வலியைப் போக்க உங்களது மருத்துவர் பல மருந்துகளை பரிந்துரைத்தாலும், நீங்கள் சாப்பிடும் உணவில் சிறிது இஞ்சியை சேர்த்துக்கொள்வதன் மூலம் மூட்டு வலியைப் போக்க முடியும். அதுமட்டுமின்றி, இஞ்சி மூட்டு வலியைப் போக்கும் நிவாரணியாகவும் செயல்படுகிறது.

மாதவிடாய் வலியைப் போக்க :
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியைப் போக்க பல மருந்துகள் உள்ளன. அவற்றை நீங்கள் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை எனில், இஞ்சியை முயற்சி செய்து பாருங்கள். இஞ்சி தசைப் பிடிப்பைக் குறைக்க உதவும். அதோடு, மாதவிடாய் காலத்தில் உங்களை நன்றாக உணரச் செய்யவும் உதவும்.

நீரிழிவு நோயைத் தடுக்க :
ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் ஏற்படும் நீரிழிவு நோயைத் தடுக்க நீங்கள் இஞ்சியை உபயோகிக்கலாம். நீரிழிவு நோயைத் தடுக்கவும், இந்நோயின் ஆபத்துகளை பெருமளவு குறைக்கவும் இஞ்சி உதவுகிறது.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

காலம் கெட்டுப்போச்சு… சிக்கலில் ஷாருக்கான் வாரிசு!

0
- ஜி.எஸ்.எஸ். தன் குழந்தைகளைப் பற்றி ஊடகங்களிடம் பலமுறை ஷாருக்கான் பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. ‘என் குழந்தைகள் மிகவும் ஒழுங்கானவர்கள். என்னைவிட கட்டுப்பாடு மிக்கவர்கள். நட்சத்திரங்களின் குழந்தைகள் என்றால் அவர்கள் சீர் கெட்டவர்களாக இருப்பார்கள் என்று...

ஷேமிங்! ஷேமிங்!

0
விழிப்புணர்வு விஷயம் - ஆர். மீனலதா, மும்பை ஷேம் ஆன் யு! ஷேம் ஆன் Her! ஷேம் ஆன் Him! ஷேம் ஆன் Them! விஞ்ஞான வளர்ச்சி அதிகமாகி, உலகம் சுருங்கிப் போன போதிலும், மக்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களை...

புண்ணியம்!

சிறுகதை : கீதா சீனிவாசன் ஓவியம் : சேகர் காலையிலிருந்தே கலையரசி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். குடும்ப நலனுக்காக அன்று சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தாள். குறிப்பாக, அந்த ஏரியாவில் பிரபலமான ஸ்வாமி ராமன்ஜி அதில்...

சுண்டி இழுக்கும் சுவையில் காரக் குழம்பு வகைகள்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி கேரட் காரக் குழம்பு தேவையானவை : சற்று நீளமான பெரிய கேரட் துண்டுகள், தேங்காய்த் துருவல், புளி, மஞ்சள் தூள், உப்பு - தேவைக்ககேற்ப. செய்முறை : வாணலியில் எண்ணெய்...

பொழுதைப் போக்க இந்த செலவு அவசியம்தானா? – மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!

0
அன்று 2.15 ரூபாயில் தியேட்டரில் படம் பார்த்த நாம், இன்று 150 ரூபாய் செலவழிக்கிறோம். இக்காலகட்டத்துக்கு இந்த செலவு ஏற்புடையதா? இல்லையா? FB வாசகியர்களின் பதிவுகள்! வறுமையில் உழலும் நடுத்தர வர்க்கத்திற்கு இது சாத்தியம்...