வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்புக்கு அனுமதி!

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்புக்கு அனுமதி!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வருகிற 14-ம் தேதி நடைபெறவுள்ள சொர்க்க வாசல் திறப்புக்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருச்சி ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி ஆட்சியர் சிவராசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 21 நாட்கள் விமரிசையாக நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம், கடந்த 3-ம் தேதி இரவு, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அநத வகையில்

வருகிற 14-ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். அன்று அதிகாலை 4:45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருள்வார். இந்நிகழ்ச்சிக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 மணி முதல், 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்கள். காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள், மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும் 14-ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளி, கல்லுாரி தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com