வண்டலூர் ஜூவில் அரிய வகை அணில் குரங்குகள் திருட்டு: பூங்கா அதிகாரிகள் அதிர்ச்சி!

வண்டலூர் ஜூவில் அரிய வகை அணில் குரங்குகள் திருட்டு: பூங்கா அதிகாரிகள் அதிர்ச்சி!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அணில் போன்று நீண்ட வால் கொண்ட ஒரு ஜோடி அணில் குரங்குகள் திருடப்பட்ட சம்பவம் அப்பூங்கா அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 நாட்களுக்கு முன்பாக அரிய வகை அணில் குரங்குகள் வைக்கப்பட்ட கூண்டின்  கம்பிகள் வெட்டப்பட்டு ஒரு ஜோடி அணில் குரங்குகள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த உயிரியல்  பூங்கா அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் அங்குள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாாணை நடத்தி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த வகை அணில் குரங்குகள் புசுபுசுவென்று அணில்களுக்கு இருப்பது போன்று நீண்ட வால் கொண்டு வசீகரமாக காட்சியளிக்கும்.

இந்த அரிய வகை குரங்குகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட வாய்ப்பு உள்ளதால், விமான நிலையம், துறைமுகங்கலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வண்டலூர் ஜூவுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் இனி மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என புதிய விதியை பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே புள்ளி புறா, காட்டுக் கோழி, வெள்ளைக்கிளி போன்ற பறவைகள் திருடப்போன நிலையில் தற்போது ஒரு ஜோடி அணில், குரங்குகள் திருடப்பட்டுள்ளது உயிரியல் பூங்காவில் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com