வந்தியதேவனாக ‘வாத்தியார்’ எம்.ஜி.ஆர்!

வந்தியதேவனாக ‘வாத்தியார்’ எம்.ஜி.ஆர்!

ராகவ் குமார் 

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழக மக்களிடையே நீங்கா இடம் பிடித்த அமரத்துவம் வாய்ந்த நாவல்.

இன்றுவரை தமிழின் முன்னணி புத்தகங்கள் வரிசையில் 'பொன்னியின் செல்வன்' நாவலுக்கு தனியிடம் உண்டு. இந்த நாவலை படமாக எடுப்பதற்கு தமிழ்த் திரையுலக ஜாம்பவன்கள் பலரும் முயற்சித்தார்கள்இந்த நாவல்களில் வரும் வந்தியதேவனாகவும், அருள்மொழி வர்மனாகவும், பழுவேட்டையாரக்கவும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க ஆசைபட்டார்கள்.     அந்த வகையில் 'வாத்தியார்' என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மறைந்த. முதல்வர் எம் ஜி ஆரும் இந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்பட் டார்.. எம் ஜி ஆரின் ஆசை பல்வேறு காரணங்களால் அப்போது நிறைவேறவில்லை. ஆனால், தற்போது நிறைவேறியுள்ளது.         

ஆம்..  அஜய் பிரதீப் இயக்கும்  'பொன்னியின் செல்வன்'  எனும் அனிமேஷன் படத்தில் வந்தியதேவனாகவும், அருள்மொழிவர்மனாகவும் 'வாத்தியார்' எம்.ஜி.ஆர். நடிக்கிறார். சமீபத்தில் எம் ஜி ஆரின் பிறந்தநாளன்று இந்த அறிவிப்பு வெளியானது.படத்தின் போஸ்டரில் எம் ஜி ஆர் இந்த இரண்டு காதபத்திரங்களிலும் கம்பீரமாகவும் ஜொலிக்கிறார். எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு இந்த புத்தாண்டில் மிக பெரிய திரை விருந்தாக இந்த படம் மைய போகிறது என்பதில் ஐயமில்லை.

மறைந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் எம்ஜிஆர் ,ற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்! தமிழகத்தின் இந்த இரு மிகப் பெரும் ஆளுமைகளும் திரையில் இணைவது காலத்தின் கொண்டாட்டம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com