இதழ்கள்
கொஞ்சம் சிரிங்க பாஸ்
வாசகர் ஜோக்ஸ்
ஓவியம் : ரஜினி
"என் கணவர் மிலிட்டரி மேன்…"
"அதுக்கொன்ன இப்போ?"
"அப்பளத்தைக்கூட சுட்டாத்தான் சாப்பிடுவார்."
– ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்
"தலைவரை 'குண்டர்' சட்டத்தில் கைது செய்தவுடன் அப்படியென்ன கேள்வி கேட்டார்?"
"அவரை எடை போடச் சொல்றார்?"
– மு.நிர்மலாதேவி, திண்டுக்கல்
ஓட்டல் ஓனர் : "இட்லி பூ மாதிரி இருக்கும் சார்…"
சாப்பிட வந்தவர் : "நிஜமாவா சொல்றீங்க?"
ஓட்டல் ஓனர் : "ஆமா சார்… தலைக்கு மேல உள்ள சாமி படத்துக்கெல்லாம் பூ மாலைக்குப் பதிலா இட்லி மாலை போட்டிருக்கோம் பாருங்க சார்."
– வி.ரேவதி, தஞ்சை
"தலைவர் ரொம்பத் தெளிவுதான்."
"எப்படிச் சொல்றே?"
"பிரியாணி செலவு அதிகமாகுதுன்னு 'இனி கட்சியில் உண்ணாவிரதப் போராட்டம் இல்லை'ன்னு அறிவிச்சுட்டார்."
– மு.நிர்மலாதேவி, திண்டுக்கல்
"எல்லாத்தையும் மத்தவங்களுக்கே தர்றியே… உனக்குன்னு எதையும் வச்சுக்கமாட்டியா?"
"எதைச் சொல்றே?"
"அட்வைஸ் பண்றீயே… அதைத்தான் சொல்றேன்."
– ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்
"திடீர்னு அதிர்ச்சி ஆயிட்டியா? டாக்டர் அப்படி என்னதான் சொன்னார்?"
"கண்ணைத் திற… வாயைத் திறன்னு சொல்லிட்டு, டக்குன்னு 'பர்ஸைத் திற'ன்னு சொன்னாரே…"