கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்
Published on

வாசகர் ஜோக்ஸ்

ஓவியம் : ரஜினி
"என் கணவர் மிலிட்டரி மேன்…"
"அதுக்கொன்ன இப்போ?"
"அப்பளத்தைக்கூட சுட்டாத்தான் சாப்பிடுவார்."       
– ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்

"தலைவரை 'குண்டர்' சட்டத்தில் கைது செய்தவுடன் அப்படியென்ன கேள்வி கேட்டார்?"
"அவரை எடை போடச் சொல்றார்?"

– மு.நிர்மலாதேவி, திண்டுக்கல்

ஓட்டல் ஓனர் : "இட்லி பூ மாதிரி இருக்கும் சார்…"
சாப்பிட வந்தவர் : "நிஜமாவா சொல்றீங்க?"
ஓட்டல் ஓனர் :
"ஆமா சார்தலைக்கு மேல உள்ள சாமி படத்துக்கெல்லாம் பூ மாலைக்குப் பதிலா இட்லி மாலை போட்டிருக்கோம் பாருங்க சார்."

– வி.ரேவதி, தஞ்சை

"தலைவர் ரொம்பத் தெளிவுதான்."
"எப்படிச் சொல்றே?"
"பிரியாணி செலவு அதிகமாகுதுன்னு 'இனி கட்சியில் உண்ணாவிரதப் போராட்டம் இல்லை'ன்னு அறிவிச்சுட்டார்."

– மு.நிர்மலாதேவி, திண்டுக்கல்

"எல்லாத்தையும் மத்தவங்களுக்கே தர்றியே… உனக்குன்னு எதையும் வச்சுக்கமாட்டியா?"
"எதைச் சொல்றே?"
"அட்வைஸ் பண்றீயே… அதைத்தான் சொல்றேன்."

– ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்

"திடீர்னு அதிர்ச்சி ஆயிட்டியா? டாக்டர் அப்படி என்னதான் சொன்னார்?"

"கண்ணைத் திற… வாயைத் திறன்னு சொல்லிட்டு, டக்குன்னு 'பர்ஸைத் திற'ன்னு சொன்னாரே…"

வி.ரேவதி, தஞ்சை
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com