
பாரம்பரியம், நவீனம், புதுமை, எளிமை, ஆரோக்கியம்… இந்த வரிசையில் ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து, பட்சணக் குறிப்புகளை அனுப்புங்க…
(நீங்கள் அனுப்பும் குறிப்புகளைக் கொண்டு, பட்சணங்களைச் செய்து பார்க்கும் வாசகர்களின் கவனத்துக்கு… குறிப்புகளை வெளியிடுவது மட்டுமே மங்கையர் மலர் பொறுப்பு… அதைச் செய்து நீங்கள் வாங்கக்கூடிய 'comments'க்கு மங்கையர் மலர் பொறுப்பல்ல. ஹி… ஹி…)
சூப்பர் பாராட்டு கிடைத்தது முதல், சொதப்பிய அனுபவங்கள் வரை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுங்க.
'டுமீல்' ஜோக்ஸ் 'டமால்' மீம்ஸ் வரவேற்கப்படுகின்றன.
கூட்டுக் குடும்பங்களாக இயங்கி, எல்லோரும் ஒன்றுகூடி பலரக பட்சணங்களைச் செய்து பகிர்ந்து கொண்ட காலம் போயே போச்சு… ஆசைக்கு ஒரு பட்சணம் வீட்டில் செய்து, ஏகப்பட்டதை கடைகளில் வாங்கிக்கொள்ளும் காலம் வந்தாச்சு… காலத்தினால் ஆன இந்த மாற்றத்தைப் பற்றி உங்க கருத்துகளை சுவைபட, சுடச்சுட எழுதுங்க…
வாசகீஸ்… உங்களுக்கான அரிய வாய்ப்பினை Kalki Online YouTube Channel வழங்குகிறது.
சூப்பர் சுவையில் பட்சணங்களை சட்டுபுட்டுன்னு செய்து, வீடியோ எடுத்து அனுப்புங்க… ஐந்து நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. ஏற்கெனவே எடுத்த வீடியோக்களைத் தவிர்க்கவும்… வீடியோவின் தரம், (ஆடியோ உட்பட) மிக சிறப்பாக இருக்கணும். நீங்கள் அனுப்பும் வீடியோ வேறு எந்த channelலிலும் பதிவேற்றம் ஆகவில்லை என்ற உறுதிமொழி அவசியம்.
பட்சணத்திற்கான recipe-யும் இணைக்க வேண்டும்.
தேர்வாகும் வீடியோக்கள் Kalki YouTube Channelல் இடம் பெறும்.
ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.