வெங்காயத்தால் வந்த விபரீதம்:அமெரிக்காவில் பரவும் விநோத நோய்!

வெங்காயத்தால் வந்த விபரீதம்:அமெரிக்காவில் பரவும் விநோத நோய்!

அமெரிக்காவில்  37 மாகாணங்களில் சுமார் 650 மக்கள் புதிய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு 'சால்மோனெல்லா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ நாட்டில் உள்ள சிவாவாலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்திலிருந்து இந்த நோய்க்கான வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் முழு சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வெங்காயத்தினை மக்கள் பயன்படுத்த வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நோய் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்ததாவது:

அமெரிக்காவில் பச்சை வெங்காயம் சேர்த்த உணவுகளை சாப்பிட்டவர்கள்தான் இந்த புதிய வைரஸ் நோய்க்கு ஆளாகியுள்ளனர். அநதவகையில் சுமார் 75 சதவீத மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது வரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. எனவே பச்சையாக வெங்காயம் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.

-இவ்வாறு அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சால்மோனெல்லா' நோய் தொற்று முதலில் குடலை பாதித்து இரைப்பை நோய்களுக்கு வழி வகுக்கிறது என்றும் அதனால் டைபாய்டு காய்ச்சல் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com